தமிழும் நானும்
முடிவில்லாத தமிழ் நாகரிகம்
தமிழன் தெரிந்து கொள்ள வேண்டியவை தமிழினத்தின் பெருமை. அதை உலகிற்கு உரக்கச் சொல்ல வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமை.
தமிழ் இலக்கியங்களில் சில 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கி.மு 300 ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்தால் எழுதப் பெற்றவைகளாகும். இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 1,00,000 கல்வெட்டு, தொல் எழுத்துப் பதிவுகளில் 55,000 க்கும் அதிகமானவை தமிழில் உள்ளன. பண்டைய புதை நகரங்கள் பல உலகிற்கு வெளிக்கொணரப்படவில்லை.
இந்த உலகம் எப்படி இருக்கிறது? தொல்காப்பியர் சொல்கிறார். நிலம், நீர், தீ, வளி, விசும்பு இந்த 5 ம் கலந்த முயக்கம் தான் உலகம் என்று தெளிவாகக் கூறினார்.
நமது நாகரிகம் உலகம் முழுவதும் பரந்திருந்த நாகரிகமாகும். பசுபிக் கிழகிந்திய தீவுகள் தொடக்கம் மேற்கே அமெரிக்கா வரையும் மத்திய ரேகைக்கு இருமருங்கிலும் தொடர்ச்சியாக பரந்து கிடந்த நாடுகளிற் பண்டைக் காலத்திலேயே நிலவிய நாகரிகம் இதுவாகும். இந்நாடுகளிற் சில உதாரனமாக அத்திலாத்தியகம் இலேமூரியாவும் கடற்கோளினால் அழிந்து விட்டன. பல நாடுகளில் வடபுல மக்களின் படையெழுச்சியினால் இந்நாகரிகம் அழிக்கப்பட்டு விட்டது.
பண்டைய எகிப்தியரும் திராவிடமும் ஒரின மக்கள் எனவும் மிக பழைய காலத்திலேயே இம்மக்கள் இந்தியாவிலிருந்து ஸ்பெயின் வரையும் பரவியிருந்தனர் எனவும் பேராசிரியர் கச்சிலி கூறுகிறார்.
தலைச் சங்க காலமும், இடைச்சங்க காலமும் புதுக்கற்காலமாகும். இதனை தொல்காப்பியம் விவரித்து உள்ளது.
“உலக மொழிகளில் மூத்த மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும்”. என்று மொழியியல் அறிஞர் நோவோம் சோம்சுகியறிவித்துள்ளார்.
மேலும் பல அறிஞர்கள் இக் கருத்தை வழி மொழிந்துள்ளனர்.
வானியல் அறிவினைத் தமிழ் மக்கள்தாம் முத முதலில் பெற்றிருந்தனர். மேலும் இவர்களின் மூலமாகவே உலகின் மற்ற பகுதிகளுக்கு இந்த அறிவு பகிரப்பட்டது. இதற்கான ஆதாரங்கள் அனைத்தும் படையெடுப்புகளால் அழிக்கப்பட்டன மற்றும் இன்னும் இவையெல்லாம் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே நிசப்தமான உண்மை.
தற்காலத்து வானியல் அறிஞர் கூறும் அனைத்தும் அக்காலத்திலேயே தமிழக அறிஞர்களால் இலக்கியங்கள் பதிவு செய்யப்பட்டுவிட்டன. அவற்றை ஆய்வு செய்து வெளிக்கொணர வேண்டியது நம் தலையாக கடைமைகளில் ஒன்றாகும்.
தற்போது தமிழை பேசக்கூடகூச்சப்படும் தமிழர்கள் உள்ளனர். மேலும் இவர்கள் தமிழ் இலக்கியங்களை கடவுளோடு பொருத்திப் பார்த்து மூட நம்பிக்கைகளையே வளர்த்துக் கொண்டுள்ளனர்.
தொல்காப்பியமும், திருக்குறளும் படைக்கப்பட்ட இடத்தில் நாம் வழித்தோன்றலகளாக வந்துள்ளோம் என்பது நமக்கு பெருமை. இவற்றை நாம் எப்போதுமே அறிவியலோடும் தொலில்நுட்பத்தோடும் பொருத்திப் பார்க்க வேண்டும். அப்போதுதான் உண்மை புலனாகும்.
இன்னும் கணக்கற்ற படைப்புகள் கண்டுபிடிக்கப் பட வில்லை என்ற சோகம் இருந்தாலும் நிச்சயமாக இந்த நாகரிகம் இன்னும் இலட்சக்கணக்காண ஆண்டுகள் உயிர் வாழ்ந்து முடிவில்லாத நாகரிகமாக சரித்திரத்தில் இடம் பெரும் என்பது உண்மை.
இவண்
நம்ம ஊரு சைன்டிஸ்ட்
வினைஞன் கல்வி நிறுவனம்
கவிதைத் தொகுப்பு
அமாவாசை
வெண்ணிலவில்லா இரவு
ஆங்காங்கே தெரியும் விண்மீனெனும்
மின்மினுப் பூச்சிகள்
காரிருள் சூழ்ந்தது பூமித் தாயை
பகலவன் எனும் குடும்பத் தலைவன்
கடல்விளிம்புக் கோட்டில்
கண்சிமிட்டி மறைய
வெண்ணிலவெனும் வேலைக்காரி
விடுமுறை கேட்டு
விண்ணப்பம் விட்டிருந்தாள்
விண்மீன் விளக்குகள்
அணைந்தனைந்தெரிய
நிலவில்லா இரவு
ஏதோ
இழந்ததோ என உண்ர்வு
காலம்
கரைந்து நடுநிசி ஆனது
தென்றல் கூட தடவிச்செல்ல வரவில்லை
ஒரு
வேலை நிலவில்லா ஏக்கம் போலும்
மாதம்ஒருமுறை வந்தே தீருமோ
அமாவாசை
என்
செய்வது !
கதிரவனுக்கில்லை இந்த பாக்கியம்
விடுப்பு எடுக்க
என்று மனம் நினைக்க
அந்நேரம் பார்த்து
என் அலாரக் கிழவி கூச்சலிட
எழுந்து சென்றேன் என் வேலையை பார்க்க
மறுநாள் வரப் போகும் பிறை நிலவை
மனதில் நிறுத்திக் கொண்டே!!!!
-
பூவிதழே
இதழருகில்
திகட்டும் தேனமுது
இடையருகில்
பகட்டும் பானமிது
இதம் தருமோ
வதம் வருமோ இங்கே
இடைவெளியில்
பதம் பார்த்ததிது !
பெண்மை பேராற்றல்
வாய்த்து விட
வன்மை வாரமல்
வளராமல் வாழ விட
கண் மை கரையாமல்
நோக்கமிட
வாய்மை வாய்
மூடிப் போகி விட
மனமிரங்கி
மாரணைத்த மறு பொழுதில்
பூவிதழே காம்பறுத்து
உதிர்வதென்ன?
மங்கை மறுமுறையில்
மன்றாடிய கணத்தில்
உதிரம் உறைந்து
போய் உடைவதென்ன?
பெண்மை பேராற்றல்
வாய்த்து விட
வன்மை வாரமல்
வளராமல் வாழ விட
கண் மை கரையாமல்
நோக்கமிட
வாய்மை வாய்
மூடிப் போகி விட
நாளும் கிழமையும்
நரமாகிய நடுப் பொழுதில்
ஏடும் எழுத்தும்
ஏளனமாய் ஏங்கும் தவிப்பில்
வீடும் தெருவும்
வீணன் என வீண் பேச்சில்
புலமை நாடும்
நாடகம் ஏனோ இந்தக் கூட்டில்?...
இதழியல்
செக்கச் சிவப்பில்லை
அது!
செதுக்கிய
சிலையும் இல்லை!
மயக்கி இழுக்கவும் இல்லை!
தேன்சுவை
என்றெல்லாமில்லை!
நச்சென்ற
அமைவில்லை!
நாடி நரம்பை
சீண்டவில்லை!
இத்தனையும்
தேவையில்லை!
ஏனோ ஓர் ஆவல்?
அவள் இதழின்
இயலை ஒரு முறை வாசித்து விட ..
இருட்டு
கருமையின் மறு பெயர்
குன்றிய வெளிச்சத்தின் குரூரம்
கல்லறையும் கருவறையும்
ஆழ் கடலும் ஆகாசமும்
அச்சத்தின் அந்தி மூலம்
அனுபவத்தின் ஆரம்ப வேர்
ஜொலிக்கும் வைரத்தின் பிறப்பிடம்
நித்தம் தொழும் தெய்வத்தின் இருப்பிடம்
கலவிக்கும் களவுக்கும் தேர்ந்த இடம்
பொன்னும் பொருளும் சேருமிடம்
உலகம் அளக்கும் உன் உள் வாய்
உயிர்ப்பிக்கச் செய்யும் உன் நாசித் துளை
நடுநிசி நிலவை
நான் கண் குளிரக் காண
எனக்கு வாய்த்த வாய்ப்பு
கடுகளவு வெளிச்சமும் கண்களுக்குப்
புலப்பட அற்புத ஆதாரம்
ஆகாய கங்கை இருட்டு
ஆழியின்
ஆழம் இருட்டு
தீது செய்ய அஞ்சாத ஒவ்வொரு
மனித மனமும் இருட்டுதான்
மூடிய இமை திறக்கும் வரை
உன்
உலகம் முழுவதும் இருட்டுதான்
எதிரெதிர்
துருவங்கள் இரண்டுமிங்கே தூரத்தில்
புருவங்கள் புனராத பார்வைதனில்
தேக்கங்கள் மிக்க இந்த தேகத்தில்
தேனமுதும் கசப்பதென்ன சோகத்தில்
காதலிலே கரையுமிந்த நேரத்தில்
கரையாத கல்லோ அவள் மார்புக்குள்
மன்றாடும் மனமொன்று பக்கத்தில்
திக்கித் திண்டாடும் இதழிரண்டும் இறுக்கத்தில்
வெட்கமோ வேட்கையோ வேகத்தில்
வெட்கித் தலைகுனிந்து வேடமிடும் காமத்தில்
பார்த்திராத பார்வையிலே பகடியாட்டம்
கேட்டிராத கேள்விகளை மௌனம் மொழியும்
எதிரெதிர் துருவங்கள் சேரும் தருணம்
எப்போது என ஏங்கி நொடி நொடி மரணம்
சேராத துருவங்கள் சேரக் காண
துடியாகத் துடிக்குதிந்த குருதி கூட்டம்.
கவிதையொன்று
எழுத்தாணி
எடுத்தெனை
எழுதியது
சிற்பமொன்று
உளி
எடுத்தெனை
செதுக்கியது
சிராய்த்தது
உளி
சிரிக்கிறது
உலகம்
-ரெ
ஏனோ!
முழுவதும்
பார்க்க ஓடோடி வந்தேன்
உன் முகம்
கூட காட்டாமல்
மறைத்துச்
செல்வதேனோ!
தீண்டுதலை
எண்ணி எண்ணி
தித்திப்பில் திளைத்திருந்தேனே!
உன் பார்வைத்
தீயினிலே
எனைச் சுட்டெரிப்பதேனோ!
பூவிலே தேன்
தேடி வந்த இந்த வண்டுக்கு
இதழில் அமர
அனுமதி மறுப்பதேனோ!
வலசை வந்த
பறவைக்கு இங்கு
திசை மாறித்
திரியும் விதியும் ஏனோ!
தென்றல்
வீட்டுக்
கூரை சலசலக்க
என்
உடல் மயிர் சிலுக்க
அருகிலிருந்த
ஆல இலை அசைவுற
மெல்ல
வந்து தீண்டியது தென்றல் என்னை
சீலிங்
பேனும் சீமை ஏசியும் என் வீட்டுத் திண்ணை
வரும்
கிராமத்து தென்றலுக்கீடோ?
எட்டாவது
எட்டினிலே தேக்கு மர கட்டிலினிலே
என் பாட்டன் படுத்துக் கொண்டு
நடு
ராத்திரி வெண்ணிலவை
வெட்ட
வெளி வானத்தில் நோட்டமிடும் நேரத்திலே
அவன் மேனி சிலிர்க்க வந்து
தடவியதிந்த தென்றல்
வேலை
வெட்டி முடித்து வந்த
என்
அப்பன் உடல் முழுதும் வீற்றிருந்த
வியர்வைத்துளி காய்ந்து போக
வீசியதிந்த தென்றல்
இதயம்
படபடக்க குருதி ஓட்டம் வேகமாக
காதல்
கடிதமொன்றை கைய்யில் பற்றிக் கொண்டு
என்
தோழன் தன் தோழிக்கு
கொடுக்க
சென்ற கணத்திலே
அவன் தோழியின் கூந்தல் மயிர்
கலையச் செய்து
இவன் நினைப்பை நிலை குலையச் செய்ய
வந்ததிந்த
தென்றல்
கலைந்த
கூந்தலில் இவன் மயங்க ,
கடிதம் பார்த்து அவள் மயங்க
ஆஹா!
என்னே அற்புதம்!!!!!!!
நான்
ஏன்
சராசரி
?
உதவி
கேட்பவனையெல்லாம்
உதாசினம் செய்துவிட்டு
காணிக்கை என்ற
பெயரில்
கடவுளை
பிச்சைக்காரனாக்கும்
பக்தர்களில் ஒருவன்
நான்!
டிராபிக் சிக்னலில் எல்லோரையும்
போல
என்
வண்டியும் கோட்டைத்
தாண்டிதான் நிற்பேன்
என
அடம்பிடிக்கிறது!
ஆம்.
அண்டை
தேசத்தை அசிங்கமாய் திட்டும்
தீவிர
தேச
பக்தர்களில் ஒருவன்
நான்!
தீண்டாமை பாவம்
என
பள்ளி
முழுவதும் படித்துவிட்டு
மதம்
என்ற
பெயரில்
மாற்று
பிரிவினரை
மனதளவில்
மட்டம்
தட்டும் மனிதன்
நான்!
அரசாங்கம் செய்வதை
அருகிலிருப்பவனிடம்
அங்கலாய்த்துவிட்டு
என்
தவறுகளை சரி
என
சரிகட்ட காரணம்
தேடும்
கயவன்
நான்!
மார்க்கெட்டில் மலிவுக்கே
மலிவு
பேசி
வாங்கிவிட்டு
பிக்
பசாரின் பில்லைப் பார்த்து
மிக
மலிவு
என்று
வியப்பவன் நான்!
பசுமைப் புரட்சி என
பேசிவிட்டு
பச்சையத்திற்காக பச்சைத் தண்ணீரில்
பால்டாயில் கலப்பவன் நான்!
மரம்
நடுவோம் என
மனதார
முழங்கிவிட்டு பக்கத்து வீட்டு
வேப்ப
மரத்தின் இலைகள்
தன்
வீட்டு
முற்றத்தில்
உதிர்ந்தவுடன் அவனுடன்
உலகப்போர் தொடுப்பவன் நான்!
ஜோக்கர் படத்தையும் அப்பா
படத்தையும்
நெகிழ்ச்சியுடன் பார்த்து விட்டு
அவயெல்லாம் நடை
முறைச்
சாத்தியமில்லை என
சாக்கு
போக்கு
சொல்பவன் நான்!
ஆம்
வீட்டிற்குள் நான்
அரசன்
தான்
ஆனாலும் என்
அலுவலகத்தில் நான்
அடிமை!
கனவுகளையெல்லாம்
தொலைத்து விட்ட
என்னை
காலம்
தள்ளிச் செல்கிறது!
எனது
அரசியல் முகப்
புத்தகத்துடன் முடிவடையும்!
எனது
ஆசைகள்
மாதக்
கடைசியை எதிர்பார்த்திருக்கும்!
நடப்பதெல்லாம் பார்த்துவிட்டு
எதுவும் நடக்காதது போல்
நடமாடும் உயிருள்ள உடல்
நான்!
ஆம்
நானும்
ஒரு
சராசரிதான்!!!
-ரெ
எதிர்பார்ப்பு
(கிழவனும் கூனிக் கிழவியும்)
விட்டு
விட்டு பெய்த மழையில்
வீட்டு
மாட ஓட்டை வழியில்
பட்டுப் பட்டுத் தெறிக்கும் நீருக்கு
அடுப்பங்கரை
சட்டி ஒன்றை
சர
சரவென இழுத்து சட்டென
அணை
கட்டினாள் கூனி கிளவி
இடது
பக்க திண்ணை தூணில்
முதுகெலும்பை
சாய விட்டு
வெறிச்சோடிய
வீதித் தெருவை
முப்பொழுதும்
நோக்கமிட்டிருந்தான்
முறுக்கு
மீசைக் கிழவன்
பெற்ற
பையன் பட்டணத்தில் தங்கிவிட
அவ்வப்
பொழுது
பேரன்
பேத்தி வரவை நோக்கி
இந்த
இரு
கட்டையும் ஒருவரை ஒருவர்
நோக்கிக்
கொண்டே
ஓராயிரம்
நினைவுகளை
விழி
வழியே பேசி ஏங்கும்
ஏக்கமும்
எதிர்பார்ப்பும்
எத்தனை
நாளுக்கென தெரியாமல்
இவ்விரண்டும்
நாட்காட்டியை
கிழித்து எறியும்
சாதலிலும்
காதல் இதுவே!!!
-
கனவுகளின்
காதலன்
மாலைப்
பொழுது
மயக்கம்
மனதை வருடும் தென்றல்
அந்தி வான மாலைப் பொழுது
இமைகளினுடே
வெண்ணிலவு உலா வர
கலைத்து விட்ட வானவில் போல்
உருக்குலைந்த மேற்கு வானம்
ஈரம்
போகாத
முத்தத் துளிகளை
அடுத்தடுத்த அலைகள்
கரை முகட்டிற்கு அளிக்க
அந்த முத்தச் சப்தம் செவியோரம் இனிக்க
வெகு
தொலைவில் பதுங்கும் பகலவன்
ஒளிரும் சந்திரன்
எட்டித் தொட நெஞ்சம் ஏங்கும்
அசைவில்லாத இமைகள்
நிசப்தமான இதழ்கள்
மனதில் ஏதோ புது உலகம்
மயங்கச் செய்யும் மாய உலகம்
சட்டென்று அழியும் மேகக் கூட்டங்கள்
பாதங்களை தடவும் அலைக் கூட்டங்கள்
தொட்டவுடன் ஏற்படும் மயிர் கூச்சல்
மொத்தத்தில் மனம் போடும் ஆனந்த கூச்சல்
காலம் கரைவது அறியாது
நிலையாய் நிற்கும் கண்கள்
நகராமல் நகரும் கால்கள்
தயக்கம் ஏனோ தெரியவில்லை
மயக்கம் தானோ மாலைப் பொழுதில்!!!!
பாவை
செந்தாழை
நிறம் போன்ற இதழிரண்டு கண்டேன் -என்
கவியை
களவுண்ட கரு விழிகள் இருகண்டேன் –மூன்றாம்
பிறையினிலே
முழு நிலவை முன் கண்டேன் –பவ்விய
பாவை அவளை பகலிரவாய் நான் கொண்டேன்
Comments
Post a Comment