நான் ஏன் சராசரி ?
உதவி
கேட்பவனையெல்லாம்
உதாசினம் செய்துவிட்டு
காணிக்கை என்ற
பெயரில்
கடவுளை
பிச்சைக்காரனாக்கும்
பக்தர்களில் ஒருவன்
நான்!
டிராபிக் சிக்னலில் எல்லோரையும்
போல
என்
வண்டியும் கோட்டைத்
தாண்டிதான் நிற்பேன்
என
அடம்பிடிக்கிறது!
ஆம்.
அண்டை
தேசத்தை அசிங்கமாய் திட்டும்
தீவிர
தேச
பக்தர்களில் ஒருவன்
நான்!
தீண்டாமை பாவம்
என
பள்ளி
முழுவதும் படித்துவிட்டு
மதம்
என்ற
பெயரில்
மாற்று
பிரிவினரை
மனதளவில்
மட்டம்
தட்டும் மனிதன்
நான்!
அரசாங்கம் செய்வதை
அருகிலிருப்பவனிடம்
அங்கலாய்த்துவிட்டு
என்
தவறுகளை சரி
என
சரிகட்ட காரணம்
தேடும்
கயவன்
நான்!
மார்க்கெட்டில் மலிவுக்கே
மலிவு
பேசி
வாங்கிவிட்டு
பிக்
பசாரின் பில்லைப் பார்த்து
மிக
மலிவு
என்று
வியப்பவன் நான்!
பசுமைப் புரட்சி என
பேசிவிட்டு
பச்சையத்திற்காக பச்சைத் தண்ணீரில்
பால்டாயில் கலப்பவன் நான்!
மரம்
நடுவோம் என
மனதார
முழங்கிவிட்டு பக்கத்து வீட்டு
வேப்ப
மரத்தின் இலைகள்
தன்
வீட்டு
முற்றத்தில்
உதிர்ந்தவுடன் அவனுடன்
உலகப்போர் தொடுப்பவன் நான்!
ஜோக்கர் படத்தையும் அப்பா
படத்தையும்
நெகிழ்ச்சியுடன் பார்த்து விட்டு
அவயெல்லாம் நடை
முறைச்
சாத்தியமில்லை என
சாக்கு
போக்கு
சொல்பவன் நான்!
ஆம்
வீட்டிற்குள் நான்
அரசன்
தான்
ஆனாலும் என்
அலுவலகத்தில் நான்
அடிமை!
கனவுகளையெல்லாம்
தொலைத்து விட்ட
என்னை
காலம்
தள்ளிச் செல்கிறது!
எனது
அரசியல் முகப்
புத்தகத்துடன் முடிவடையும்!
எனது
ஆசைகள்
மாதக்
கடைசியை எதிர்பார்த்திருக்கும்!
நடப்பதெல்லாம் பார்த்துவிட்டு
எதுவும் நடக்காதது போல்
நடமாடும் உயிருள்ள உடல்
நான்!
ஆம்
நானும்
ஒரு
சராசரிதான்!!!
Comments
Post a Comment