தலை மாற்று அறுவை சிகிச்சை
தலைப்பிலேயே
தெரிந்து விடும் இது தலையை தரிக்கும் விசயம் என்று.
அறிவியலின்
அட்டகாசமான அற்புதங்களில் இதுவும் ஒன்று.
தலைப்பின்
அர்த்தம் புரிந்தும் புரியாமல் வாசிப்பவர்களுக்காக முதலில் அதனை விவரித்து விடுகின்றேன்.
நமக்கு
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பற்றி தெரிந்திருக்கும். அதாவது ஒருவர் உடலிலுள்ள ஒரு உறுப்பை அறுவை சிகிச்சை மூலம் கச்சிதமாக பெயர்த்தெடுத்து அந்த உறுப்பு செயலிழந்த மற்றொருவரின் உடலில் பொருத்துவதாகும்.எடுத்துக்காட்டாக இதயம், கல்லீரல்,சிறுநீரகம் போன்றவை.
இதனைப்
போலவே ஒரு உடலில் இருந்து தலையை பெயர்த்தெடுத்து மற்றொரு உடலில் பொருத்துவது தான் இந்த தலை மாற்று அறுவை சிகிச்சையாகும்.
அறிவியல் பூர்வமாக சொல்வதென்றால் மூளை செயலிழந்த ( மூளைச் சாவு அடைந்த ) ஒருவரது உடல் நன்றாக இயங்கும்
பட்சத்தில் அந்த உடலில் உடல் பகுதி முழுவதும் செயழிலந்த ஒருவரது தலையை பொறுத்தி செயல்பட வைப்பதே இதன் நோக்கமாகும். நோக்கம் சரியாக
இருக்கட்டும். ஆனால் இந்த முறை வேலை செய்யுமா?. நாய், குரங்கு,
எலி போன்ற உயிரினங்களில் பரிசோதனை நடத்தப் பட்டு
விட்டது. முன்னர் பெரும்பாலும்
தோல்வியில் முடிந்த முயற்சிகள் தற்போதைய மருத்துவத்துறையின் வளர்ச்சியில் சாத்தியம் ஆனது.. ஆனால் அவ்வாறு தலைமாற்று செய்த உயிரினங்கள் சில மணி நேரங்களே உயிருடன்
இருந்தன.
எது எவ்வாறு ஆகினும், இன்னும் சில பரிசோதனைகளில் எடுத்த முயற்சியில்
வெற்றி அடைந்து மனிதனில் பரிசோதிக்க ஒரு தனி மருத்துவப் படை இத்தாலி
நாட்டு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான
செர்ஜியோ கெனவெரோ –ன் தலைமையில்
உழைத்துக் கொண்டிருக்கிறது. இவர் கடந்த 30
வருடங்களாக இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்
மனிதனில் இந்த அறுவை சிகிச்சை முயற்சி இந்த ஆண்டு இறுதியில் செய்வதற்கு கால அட்டவணையும் தயார்.
அது சரி. இந்த முயற்சிக்கு இவர்களை நம்பி உடலும் தலையும் தரப் போவது
யார்?
உடல் பற்றி
கவலை இல்லை. மூளைச்சாவு என்பது தற்போதைய மருத்துவ முறையால் குணப் படுத்த முடியாத ஒன்று
என்பதால் கிட்டத்தட்ட மூளைச்சாவு அடைந்தவர் இறந்தவருக்கு சமம். எனவே உடல் கிடைப்பதில்
கடினமில்லை.
ஆனால், தன்
தலையை கொய்து கொள்ள யார் அனுமதி தருவார்.
அதற்கும் ஆள் தயார். ரஷ்யாவைச் சேர்ந்த வலேரி ஷ்பிரிடோனவ் என்ற 31 வயதுடைய நிரலர் (programmer) வெர்டிக்-ஹாஃப்மான் என்ற நோயால் அவதிப்பட்டு வருகிறார். இந்த நோயால் அவரது தலைக்கு கீழ் உள்ள உடல் பகுதி முழுவதும் செயலற்ற நிலையில் அவர் சக்கர நாற்காலியில் தனது வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.
இவர் இந்த மருத்துவக் குழுவின் மீது நம்பிக்கை வைத்து தனக்கு நல்ல எதிர்காலம் பிறக்கும் என தனது தலையை தானமளிக்க சம்மதித்திருக்கிறார்.
இந்த அறுவை சிகிச்சையின் சுவாரசியங்களில் சில பின்வருமாறு.
இரத்த நாளங்கள் மற்றும் தண்டு வடப் பகுதியை துல்லியமாக வெட்டுவதற்கு சுமார் 200,000 டாலர் மதிப்புள்ள வைர நானோ கத்தி பயன்படுத்தப் படுகிறது.
சிகிச்சையின் மொத்த செலவு சுமார் 11 மில்லியன் டாலர்கள் ( 1 கோடியே 10 இலட்சம் டாலர்கள் ).
இது ஒரு 36 மணி நேரம் நடக்கவிருக்கும் அறுவை சிகிச்சையாகும்.
இந்த சிகிச்சையில் 150 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பங்கேற்கின்றனர்.
அறுவை சிகிச்சை முடிந்ததும் தலை மாற்றப் பட்டவர் 3-4 வாரங்களுக்கு மயக்க நிலையில் இருப்பார்.
அனைத்தும் சரியாக நடந்தால் மருத்துவத்துறையின் அடுத்த யுகம் ஆரம்பமாகிவிட்டதாக அர்த்தம். ஆனாலும் இதைப் பற்றி மக்களிடையே பொதுவான கருத்து என்பது எதிர்மறையாகவே உள்ளது.
அத்தனையும் தாண்டி இந்தக் குழு சாதனை செய்யுமா என டிசம்பர் மாதம் வரை பொருத்திருந்து பார்ப்போம்
இப்படிக்கு
நம்ம ஊரு சைன்டிஸ்ட்
Comments
Post a Comment