புவியின் மொத்த உயிரினங்களை துடைத்து விடக் கூடிய சக்தி எது?

This is what it would take to kill all life on Earth

 

  ஒரு மிகப் பெரிய விண்கல்லின் மோதலானது இவ்வுலகில் உள்ள மில்லியன் கணக்கான உயிரினங்களை அழித்துவிடும். ஆனால் அந்த நிகழ்வின் தொடர்ச்சியாக நடக்கும் விளைவுகள் மிகவும் வல்லமை வாய்ந்தது. ஆழிப் பேரலை , நில நடுக்கங்கள், மிகப் பரந்த அளவிலான புகை மேகக் கூட்டங்கள் சூரிய வெளிச்சத்தை மறைத்து வானத்தில் படர்ந்திருந்து மிகப் பெரிய அழிவிற்கு வழி வகுக்கும். தோராயமாக 65 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் நடந்த இதைப் போன்ற நிகழ்வு பூமியில் வாழ்ந்த 75 % உயிரினங்களை அடியோடு அழித்து விட்டது.

இதற்கெல்லாம் மேலாக புவியின் மொத்த உயிரினங்களை துடைத்து விட மிக்க சக்தி கொண்ட ஒரு வானியல் நிகழ்வு நடக்க வேண்டும். அந்த நிகழ்வு இந்த உலகில் உள்ள அனைத்து பெருங்கடல்களின் நீர் முழுவதையும் ஆவியாக்கும் அளவு வலிமை கொண்டதாக இருக்க வேண்டுமாம். இதனால் ஏற்படும் விளைவானது, வெப்பத்தாலும் கதிர்வீச்சாலும் இதுவரை கண்டுபிடிக்கப் பட்ட அழிக்க முடியாத மிகக் கடினமான உயிரினங்களில் ஒன்றான மெல்ல நகரும் உயிர்வகையான பெயரடை (tardigrade) என்ற பெயர் கொண்ட உயிரினத்திற்குக் கூட பூமியை வாழத்தகாத இடமாக மாற்றும். இது ஒரு சமீபத்திய ஆராய்ச்சியின் கருத்தாகும்.
ஆராய்ச்சியாளர்கள் ஒரு கேள்வியை மையமாக வைத்து இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டார்கள்.
இப்புவியின் உயிர்கள் எவ்வளவு தாக்குப் பிடிக்கும் திறன் கொண்டது?
நம் உலகத்தை சிதைக்கக் கூடிய அளவு திறன் கொண்ட நிறைய விண்கற்கள் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் நமது புவியின் சுற்றுவட்டப் பாதையின் குறுக்கேவோ அல்லது புவியை நோக்கிய திசையிலோ இல்லை.
சூப்பர் நோவா என அழைக்கப் படும் நட்சத்திர வெடிப்பு நிகழ்ந்து அதன் காரணமாக நமது பூமியில் உள்ள நீரெல்லாம் ஆவியாகிப் போய்விடுமோ என்ற அச்சமும் இல்லை. ஏனெனில் அந்த நிகழ்வு நடைபெற்று அதன் காமா கதிர்வீச்சு மூலமாக வெப்பம் நம்மை வந்தடைய நமது பூமி அந்த நட்சத்திரத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு நெருங்கிய தொலைவில் இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு குறிப்பிட்ட அளவு தொலைவில் எந்த ஒரு நட்சத்திரமும் இல்லை. அதனால் இந்த மாதிரியான சாத்தியக்கூறுகளால் பூமியில் உள்ள உயிரினங்கள் அழிவது என்பது பூஜ்ஜிய சதவிகிதமாகும்.
ஆராய்ச்சியாளர்கள் பெயரடை (tardigrade) உயிரினத்தை நன்றாக ஆராய்ந்துள்ளனர். பெயரடை என்பது நீரில் வாழும் நுண்ணிய உயிராகும். இவை குளிரவில் -272°C லிருந்து சூடான அளவில் 150°C வரை வெப்பம் தாங்கிக் கொள்ளும். ஆனால் இதே அளவு வெப்பத்தை மற்ற உயிரினங்கள் தாங்க முடியாமல் இறந்து விடும். இவை நீர்க் கரடிகள் எனவும் அழைக்கப் படும். இவையால் விண்வெளியின் வெற்றிடத்தில் கூட பல நாட்களுக்கு வாழ முடியும்.பெருங்கடலின் அடிப்பகுதியில் இருக்கும் அழுத்தத்தைப் போல ஆறு மடங்கு அழுத்தத்தையும் மனிதனால் தாங்கிக் கொள்ளக் கூடிய கதிர்வீச்சு அளவைப் போல ஆயிரம் மடங்கு கதிர்வீச்சு அளவையும் தாங்கும் வல்லமை கொண்டது. ஆனால் அவையால் நீர் ஆதாரம் இல்லாமல் அதிக வெப்பத்தையும் கதிர்வீச்சையும் தாங்கிக் கொள்ள முடியாது.
இத்தனை ஆராய்ச்சிகளும் புவிக்கானது மட்டும் அல்ல. இந்த தரவுகள் வேற்று கிரகங்களில் உயிரினங்களின் தேடலுக்காகவும் நமக்கு உதவியாக இருக்கும்.
பெயரிடை மட்டுமல்ல, நிறைய நுண்ணிய உயிரினங்கள் எப்பேற்பட்ட பேரழிவுகளையும் தாங்கிக் கொண்டு உயிர் வாழும் திறன் கொண்டவை. அணு ஆயுதங்களால் ஏற்படும் தாக்கத்தையும் தாங்கிக் கொள்ள முடிந்தவை.
தற்போது நடக்கும் அரசியலில் ஏற்படும் தவற்றால் எதிர்காலத்தில் விளையவிருக்கும் அழிவுகளையும் தாங்க வல்லவை.

இவண்
நம்ம ஊரு சைன்டிஸ்ட்
source: www.sciencemag.org

Comments

Popular posts from this blog

பழந்தமிழர் வான் ஆராய்ச்சி

முடிவில்லாத தமிழ் நாகரிகம்

நான் ஏன் சராசரி ?