SCIENTISTS
நம்மாழ்வார்-இயற்கையின் புதல்வன்
(06 ஏப்ரல் 1938 - 30 திசம்பர் 2013)
தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஆவார். தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு சிற்றூரில் பிறந்த இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை கற்றவர். பசுமைப் புரட்சி, தொழில்மயமாக்கம், சூழல் மாசடைதல் தொடர்பாக காரமான விமர்சனங்களையும் ஆக்கபூர்வமான மாற்றுகளையும் முன்வைத்தவர். தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்தவர். வானகம், குடும்பம் அமைப்பு உட்பட பல அரசு சாரா அமைப்புகளின் அமைப்பாளராக இருந்தார்.
30 திசம்பர் 2013 அன்று பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டியில் (பிச்சினிக்காடு சிற்றூரில்)மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த சென்றிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.
வரலாறு
நம்மாழ்வார், தஞ்சை மாவட்டத்தில் 1938இல் பிறந்தார். தந்தை பெயர் ச கோவிந்தசாமி. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 2007இல் காந்திகிராம பல்கலைக்கழகம் அறிவியலில் மதிப்புறு முனைவர் பட்டம் தந்தது. கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் 1960ஆம் ஆண்டு ஆய்வு உதவியாளராக பணியில் சேர்ந்து ஆய்வகங்களில் நிலவும் களப்பணியில் ஈடுபடாது செய்யப்படும் பயனில்லாப் பணிகளுக்கு எதிராக குரல் கொடுத்து மூன்றாண்டுகளில் வெளியேறினார். 1963ஆம் ஆண்டு முதல் 1969ஆம் ஆண்டு வரை அவர் மண்டல விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் வேலை செய்தார். ஜப்பானிய சிந்தனையாளர் மற்றும் விவசாயி, மசனோபு ஃபுக்குவோக்காவால் ஈர்க்கப்பட்டு இயற்கை அறிவியலாளர் ஆனார் நம்மாழ்வார்.
எதிர்த்துப் போராடியவை
- மரபணு சோதனைகள்
- பி.டி. கத்தரிக்காய்க்கு அனுமதி
- வெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்கள் இறக்குமதி
- விவசாய நிலங்களை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துதல்
களப்பணிகள்
- சுனாமியினால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்ட நிலங்கள் சீரமைப்பு
- இந்தோனேசியாவில் சுனாமி பாதிக்கப்பட்ட பகுதியில் 30 மாதிரி பண்ணைகள் அமைத்தல்
- 60 க்கும் மேற்பட்ட கரிம விவசாய பயிற்சி மையங்களை தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் நிறுவினார்.
- மீத்தேன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்தார்.
- "தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்' என்ற அமைப்பினைத் தொடங்கி, தமிழ்நாட்டின் கிராமப்புறங்கள் எல்லாவற்றையும் கால்நடையாக எட்டி, அங்கு கருத்தரங்கங்களும், பயிற்சி வகுப்புகளும் நடத்தினார். "பேரிகை' என்றொரு இயற்கை உழவாண்மை வாழ்வியல் மாத இதழை வெளிட்டார்.
உருவாக்கிய அமைப்புகள்
- 1979ல் குடும்பம்
- 1990 லிசா (1990 – LEISA Network)
- 1990 – மழைக்கான எக்லாஜிக்கள் நிறுவனம், கொலுஞ்சி , ஒடுகம்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம்
- இந்திய அங்கக வேளாண்மை சங்கம் (Organic Farming Association of India)
- நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்
- வானகம், நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம் உலக உணவு பாதுகாப்பிற்கான பண்ணை ஆராய்ச்சி மையம்
படைப்புகள்
- தாய் மண் (இயற்கை வழி உழவாண்மை பாடநூல்), வெளியீடு: வானகம்
- தாய் மண்ணே வணக்கம் (நூல்) நவீன வேளாண்மை வெளியீடு
- நெல்லைக் காப்போம்
- வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும், இயல்வாகை வெளியீடு
- இனி விதைகளே பேராயுதம், இயல்வாகை வெளியீடு
- நோயினைக் கொண்டாடுவோம், இயல்வாகை வெளியீடு
- பூமித்தாயே, இயல்வாகை வெளியீடு
- நோயினை கொண்டாடுவோம், இயல்வாகை வெளியீடு
- மரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள் (நூல்) வாகை வெளியீடு
- களை எடு கிழக்கு பதிப்பகம்
விருதுகள்
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், இவருக்கு சுற்றுச் சூழல் சுடரொளி விருதினை வழங்கியது. திண்டுக்கல்லைச் சேர்ந்த காந்திகிராம கிராமப்புற நிறுவனம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது
source: wikipedia
இவண்
நம்ம ஊரு சைன்டிஸ்ட்
Comments
Post a Comment