Posts

Showing posts from July, 2017

விண்வெளியின் சத்தங்கள்

Image
விண்வெளி என்பது வெற்றிடமானது என்றாலும் மின்காந்த அதிர்வுகளாக ஒலி அங்கே நிறைந்துள்ளது இதற்கென சிறப்பாக உருவாக்கப் பட்ட கருவிகள் மூலமாக விண்வெளியில் அங்கங்கே உருவாகும் ஓசையை நம்மால் உணரக் கூடிய அதிர்வெண்ணில் ( 20 Hz - 20000 Hz ) பதிவு செய்து கேட்க முடியும். பதிவு செய்யப் பட்ட இந்த ஒலிகளானது மின்காந்த மின்னூட்டத் துகள்களின் மோதல்களால் உண்டானவை இந்த ஒளிப்படத்தில் வருபவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.. பூமியின் சத்தம் செவ்வாய் கோளின் சத்தம் சூரிய புயலின் சத்தம் சனிக் கோள் வளையத்தில் உண்டாகும் ஒலி வியாழன் கோளின் சத்தம் நட்சத்திரங்களுக்கிடையேயான சத்தம் இரு கருந்துளைகள் மோதலின் சத்தம் இவண் நம்ம ஊரு சைன்டிஸ்ட்

புவியின் மொத்த உயிரினங்களை துடைத்து விடக் கூடிய சக்தி எது?

Image
This is what it would take to kill all life on Earth     ஒரு மிகப் பெரிய விண்கல்லின் மோதலானது இவ்வுலகில ் உள்ள மில்லியன் கணக்கான உயிரினங்களை அழித்துவிடும். ஆனால் அந்த நிகழ்வின் தொடர்ச்சியாக நடக்கும் விளைவுகள் மிகவும் வல்லமை வாய்ந்தது. ஆழிப் பேரலை , நில நடுக்கங்கள், மிகப் பரந்த அளவிலான புகை மேகக் கூட்டங்கள் சூரிய வெளிச்சத்தை மறைத்து வானத்தில் படர்ந்திருந்து மிகப் பெரிய அழிவிற்கு வழி வகுக்கும். தோராயமாக 65 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் நடந்த இதைப் போன்ற நிகழ்வு பூமியில் வாழ்ந்த 75 % உயிரினங்களை அடியோடு அழித்து விட்டது. இதற்கெல்லாம் மேலாக புவியின் மொத்த உயிரினங்களை துடைத்து விட மிக்க சக்தி கொண்ட ஒரு வானியல் நிகழ்வு நடக்க வேண்டும். அந்த நிகழ்வு இந்த உலகில் உள்ள அனைத்து பெருங்கடல்களின் நீர் முழுவதையும் ஆவியாக்கும் அளவு வலிமை கொண்டதாக இருக்க வேண்டுமாம். இதனால் ஏற்படும் விளைவானது, வெப்பத்தாலும் கதிர்வீச்சாலும் இதுவரை கண்டுபிடிக்கப் பட்ட அழிக்க முடியாத மிகக் கடினமான உயிரினங்களில் ஒன்றான மெல்ல நகரும் உயிர்வகையான பெயரடை (tardigrade) என்ற பெயர் கொண்ட உயிரினத்...

தலை மாற்று அறுவை சிகிச்சை

Image
(அறிவியலின் அட்டகாசமான அற்புதம்) தலைப்பிலேயே தெரிந்து விடும் இது தலையை தரிக்கும் விசயம் என்று ‌. அறிவியலின் அட்டகாசமான அற்புதங்களில் இதுவும் ஒன்று . தலைப்பின் அர்த்தம் புரிந்தும் புரியாமல் வாசிப்பவர்களுக்காக முதலில் அதனை விவரித்து விடுகின்றேன் . நமக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பற்றி தெரிந்திருக்கும் . அதாவது ஒருவர் உடலிலுள்ள ஒரு உறுப்பை அறுவை சிகிச்சை மூலம் கச்சிதமாக பெயர்த்தெடுத்து அந்த உறுப்பு செயலிழந்த மற்றொருவரின் உடலில் பொருத்துவதாகும் . எடுத்துக்காட்டாக இதயம் , கல்லீரல் , சிறுநீரகம் போன்றவை .   இதனைப் போலவே ஒரு உடலில் இருந்து தலையை பெயர்த்தெடுத்து மற்றொரு உடலில் பொருத்துவது தான் இந்த தலை மாற்று அறுவை சிகிச்சையாகும் .   அறிவியல் பூர்வமாக சொல்வதென்றால் மூளை செயலிழந்த ( மூளைச் சாவு அடைந்த ) ஒருவரது உடல்   நன்றாக இயங்கும் ‌ பட்சத்தில் அந்த உடலில் உடல் பகுதி முழுவதும் செயழிலந்த ஒருவரது தலையை பொறுத்தி செயல்பட வைப்பதே இதன்   நோக்கமாகும் . நோக்கம் சரியாக இருக்கட...